06/09/2021 ஆம் தேதி திங்கள்கிழமை காலை 10 மணி அளவில் சென்னை சின்னமலையின் ரஜிவ் காந்தி சிலை அருகே பிற்படுத்தப்பட்ட மிகப் பிற்படுத்தப்பட்ட 254 சமுதாயங்களை சேர்ந்த சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 10.5 சதவீத சிறப்பு சட்டத்தை ரத்து செய்யக் கோரியும், ஜாதிவாரி கணக்கெடுக்க கோரியும், வன்முறையில் ஈடுபடுவோருக்கு மக்கள் வரிப் பணத்தில் மணிமண்டபம் அமைப்பதை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

டாக்டர் காந்தையா செய்தியாளர்களுடன் சந்திப்பின் காணொளி

 

இந்த சமுதாயங்களை சேர்ந்த தலைவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு சில சுயநலமிகள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களை மேடைக்கு அழைத்து வந்தனர். அவரும் பேச ஆரம்பித்தார்.

சமூகநீதி கூட்டமைப்பைப் பொறுத்தவரை எந்த அரசியல் கட்சி அல்லது அரசியல் கட்சித் தலைவர்களை எங்களது செயல்பாட்டில் அழைப்பது அவர்கள் பங்கெடுப்பது என்பது எங்களது விதிமுறைகளுக்கு முரணானதாகும். மேலும் உயர்திரு திருமாவளவன் அவர்கள் கட்சியினர் சட்டமன்றத்தில் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த அரசு ஆணையை பற்றி மாண்புமிகு முதல்வர் அவர்கள் அறிவித்த போதும், வன்முறையில் ஈடுபட்ட 20 பேருக்கு மணிமண்டபம் மக்கள் வரிப்பணத்தில் மணி மண்டபம் அமைப்பதாக அறிவித்த போதும், ஒரு சிறு எதிர்ப்பை கூட பதிவு செய்யவில்லை.

அவ்வாறு சட்டமன்றத்தில் ஒரு நிலைப்பாடும் வெளியே ஒரு நிலைப்பாட்டையும் காண்பிக்கும் அவர் இங்கு பேசுவது முறையல்ல என்ற முறையில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பினர் இந்த ஆர்ப்பாட்ட செயல்முறைகளில் இருந்து தங்களை விலக்கிக் கொண்டனர்.

மற்றபடி வந்திருந்த சமுதாயத்தினரும் பங்கெடுத்த அனைவரும் உணர்ச்சிப் பிழம்பாக ஒரு சாதி சார்பாக அரசு எடுக்கும் நடவடிக்கைகளை ஒரே குரலில் ஒருமித்து கண்டனம் செய்தனர். இந்தப் போராட்டம் உணர்ச்சிகரமான ஒரு போராட்டமாக இருந்தது.