அன்பிற்கினிய உறவுகளே !

21.04.22, வியாழக்கிழமை அன்று மாலை ஆறு மணிக்கு , சென்னை எம்.ஆர்.சி, கூட்டஅரங்கில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்ட வன்னியர் அல்லாத மிகப் பிற்படுத்தப்பட்ட நமது 255 சமுதாய மக்களுக்காக, சட்டமன்றத்திலும், சட்டமன்றத்திற்கு வெளியிலும் கடந்த ஒன்றரை வருடகாலமாக, நமது சமுதாயமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த சட்டமன்ற உறுப்பினரும் அல்லது அமைச்சரும் குரல் கொடுக்கவில்லை என்பதால்,

இந்த சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 150 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அந்தந்த சமுதாயங்களை சேர்ந்த நமது மக்கள் அரசியல் சார்பின்றி நமது சமுதாயங்களின் நன்மைக்காக-நமது குழந்தைகளின் எதிர்காலத்திற்காக, இட ஒதுக்கீட்டில் நம்மை புறக்கணிக்கக் கூடாது, ஜாதிவாரி கணக்கு எடுக்காமல் நமது உரிமைகளைப் பறிக்கும் தமிழக அரசின் வன்னியர் தனி ஒதுக்கீட்டுக்காக எந்த ஆதரவையும் அளிக்கக் கூடாது என்ற நமது உணர்வை வெளிப்படுத்த, முன்தினம் மாலை 6 மணிக்கு அனைத்து சமுதாய பிரதிநிதிகளையும் சந்திக்க வருமாறு அவரவர் சமுதாயங்களை சேர்ந்த இளையோர் அந்தந்த MLA-க்களின் இல்லம் சென்று வேண்டுகோள் விடுத்தோம்.

 

நமது சமுதாய இளைஞர்கள் சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கும் சென்று, நேற்று இருந்த கூட்டத்தை நினைவு படுத்தினார்கள்.  அப்படி இருந்தும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் திரு.ஈ.ஆர் .ஈஸ்வரன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக அதன் செயல் தலைவர் ,மயூரா ஜெயக்குமார் சட்டமன்ற உறுப்பினர் திரு. கணேசன் ஆகியோர் தவிர திமுக ,அதிமுக, பிஜேபி, மதிமக, மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட ஆறு கட்சிகளைச் சேர்ந்த அனைத்து எம்எல்ஏ க்களும் நமது சமுதாயங்களின் -இளையோரின் வேண்டுகோளை புறக்கணித்து, நேற்றைய சமுதாயப் பிரதிநிதிகள் கூட்டத்திற்கு வரவில்லை.

ஆனால் திமுக கூட்டணியில் இருந்த போதும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவரும், இந்திய தேசிய காங்கிரசின் செயல் தலைவர், பிரதிநிதி, ஆகியோர் வந்திருந்தனர். அவர்களுக்கு நாம் நன்றிக்கடன் பட்டவர்களாவோம் .

நமது சமுதாய பிரதிநிகள் அனைவரும் அரங்கத்தினுள் வலப்புரம் அமரந்திருக்க MLA க்களுக்காக ஒதுக்கப்பட்ட இடப்புரத்தில் அமர்ந்திருக்கும் சமுதாய உணர்வு உள்ள இவர்களது புகைப்படங்களை காணலாம்.

தேர்தலின் போது மட்டும், நான் உங்கள் ஜாதி என்று கூறி ஓட்டு பெற்ற நமது சமுதாய எம்எல்ஏக்கள் ,நமது சமுதாயங்களை புறக்கணித்து , வன்னியர் என்ற ஒரே சமுதாயத்திற்காக அனைத்து வகையிலும், அந்தந்த கட்சி தலைவர்கள் கூறுவதற்கு மட்டும் கட்டுப்பட்டு ,நமது மக்கள் -இளைஞர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கி சட்டசபையிலும் வெளியேயும் வன்னிய இட ஒதுக்கீட்டிற்கு மட்டும் ஆதரவாக நடந்து கொள்வது நியாயமா? இவர்களுக்கு எவ்வாறு பாடம் புகட்டுவது என்பதை விரைவில் முடிவு செய்வோம்.