தமிழ்நாடு யாதவர் சங்கங்களின் கூட்டமைப்பு (Tamilnadu Yadav federation) திரு. சோலைமலை பிச்சை யாதவ் தலைமையில் மதுரையில் ஓட்டல் மெட்ரோபாலிட்டன் இல் நடைபெற்றது
 
அந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு யாதவ சங்கங்களின் தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்துகொண்டு கூட்டமைப்பின் அவசியம் பற்றி எடுத்துக் கூறினார்கள்.
 
தமிழ்நாடு அனைத்து யாதவ சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் வரும் பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னையில் பிரம்மாண்டமான மூன்றாவது யாதவர் எழுச்சி மாநாடு நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
இதனை பார்க்கும் யாதவ குல நண்பர்கள் தாங்கள் சார்ந்துள்ள பல்வேறு சமூக வலைதளங்களில்( WhatsApp, Instagram, Twitter, Facebook) இந்த செய்தி பரப்புமாறு வேண்டி கேட்டுக் கொள்வதாக கூட்டத்தில் அறிவுரைக்கப்பட்டது
 
சென்னையில் நடைபெறும் மூன்றாவது எழுச்சி மாநாட்டில் திரளாக கலந்து கொண்டு மாநாட்டை வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்வதாக திரு. சோலைமலை பிச்சை யாதவ் தலைவர் மற்றும் தமிழ்நாடு யாதவ சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கோரியுள்ளனர்