அன்பார்ந்த சொந்தங்களே!,
நாளை சென்னை சின்னமலையில் வைத்து சமூக நீதி கூட்டமைப்பின் 115 MBC/DNT, 146 BC சாதிகளின் சார்பாக பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. அதில் சென்னையில் உள்ள யாதவர்கள் அனைவரும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும். ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி அந்தப் போராட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ளவில்லை என்றால், நாளைய நம் சந்ததி மட்டுமல்ல, உங்கள் மனச்சாட்சியே உங்களை மன்னிக்காது.
இது யாருக்காகவோ நடக்கிற போராட்டமல்ல, நம் ஒவ்வொருவருக்காக, நாமே நடத்துகிற போராட்டம் ஆகும்.
இந்த போராட்டத்திற்காக தென் மாவட்டங்களில் இருந்து எண்ணற்றவர்கள் தங்களது தொழிலை விட்டு, பணம் செலவு செய்து அர்ப்பணிப்பு உணர்வுடன் வருகிறார்கள். ஆனால் நாமோ சென்னையில் இருக்கிறோம். சென்னையில் இருந்து கொண்டு நம் சமுதாயத்திற்காக நடக்கிற ஒரு போராட்டத்தில் கலந்து கொள்ளாமல், சுயநலத்தோடு இருப்போமானால், நான் இந்த சமுதாயத்தை சேர்ந்தவன் என்று சொல்வதற்கு தகுதியற்றவர்களாகி விடுவோம்.
ஆகையால் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள சொந்தங்களே, நாளைய போராட்டத்தில் கலந்து கொண்டு, நமது சமுதாயத்திற்கு விடப்பட்ட சவாலை வென்றெடுப்போம் வாருங்கள்!
எதிர்பார்ப்புடன்,
அனைத்து யாதவர் சங்கங்களின் கூட்டமைப்பு