அன்புள்ள பிற்படுத்தப்பட்ட சமுதாய பிரதிநிதிகளே! உறவுகளே!
இட ஒதுக்கீட்டு பிரச்சனையில் நாம் வன்னியர் அல்லாத 115 மிகப் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருடன் ஒன்றிணைந்து “சமூகநீதி கூட்டமைப்பு” என்ற ஒரு அமைப்பை உருவாக்கி ,இட ஒதுக்கீட்டில் ,ஒரு ஜாதி சார்பாக 254 சமுதாய இளைஞர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் வண்ணம் ஏற்படுத்தப்பட்ட சட்டம் மற்றும் அரசு ஆணைகளை எதிர்த்துப் போராடி வருகிறோம்.

அதன் ஒரு அங்கமாக சமூகநீதி கூட்டமைப்பின் சார்பில் வரும் 6.9.2021 திங்களன்று காலை 10 மணிக்கு எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடைபெறும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் அதன் பின் நடக்க இருக்கும் பேரணி ஆகியவற்றில் பிற்படுத்தப்பட்ட சமுதாய பிரதிநிதிகள் அந்தந்த பகுதியில் உள்ளவர்களுடன் இந்த ஆர்ப்பாட்டம் மற்றும் பேர‌ணி ஆகியவற்றில் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறோம். பங்கேற்போர் பற்றிய விபரங்களை கோவையில் உள்ள நமது SFRBC அலுவலகத்தில் மேலாளர் செல்வி: நிவேதாவிடம் தொலைபேசி எண்கள்: 8072678821; 9944428101 தகவல் கொடுக்க வேண்டுகிறோம்.
நன்றி,
இப்படிக்கு,
நிர்வாகிகள் SFRBC.
Chennai contact number
Dr. Kanthaiah 9445573750