யாதவர் பேரவை சார்பில் கோவை ஹோப்ஸ் அருகிலுள்ள மணி மஹாலில் தமிழ்நாடு யாதவர் பேரவை மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. யாதவர் பேரவை நிறுவனர் டாக்டர் ஆர்.கந்தையா யாதவ் மற்றும் நிர்வாகசபை வேலுச்சாமி யாதவ் முன்னிலையில் 01-11-2021 அன்று கூட்டம்  நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தலைவர் சேலம் ஜிஜி கண்ணன் யாதவ், பொதுச் செயலாளர் அரசு ஸ்ரீனிவாசன் யாதவ், கூடுதல் பொது செயலாளர் ஸ்ரீதர் யாதவ், பொருளாளர் ஜெயக்குமார் யாதவ், தலைமை நிலைய செயலாளர் கோதண்டராமன் யாதவ், மாநில அமைப்பு செயலாளர் ராதாகிருஷ்ணன் யாதவ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கோவை மாவட்ட துணை தலைவர் பிரீமியர் பிரபாகரன் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினார். நிகழ்ச்சியில் கோவை மாவட்ட யாதவர் பேரவைத் தலைவர் மாரிமுத்து யாதவ், செயலாளர் ரங்கநாதன் யாதவ், பொருளாளர் பரமசிவம் யாதவ் மற்றும் பேரவை நல அறக்கட்டளை நிர்வாகிகள் தலைவர் சோலைமலை யாதவ், பொதுச்செயலாளர் நவநீத கிருஷ்ணன் யாதவ், துணை தலைவர் வசந்தகுமார் யாதவ், பொருளாளர் அசோக் குமார் யாதவ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.